2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

கவிஞர் இனியவனின் ‘மழை நதி கடல்’ நூல் வெளியீடு

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(யூ.எல். மப்றூக்)

கவிஞர் இனியவன் இஸாறுதீனின் ‘மழை நதி கடல்’ கவிதை நூல் வெளியீடு, அண்மையில் அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு கட்டார் பல்கலைக்கழகத்தின் துணைப்பீடாதிபதி கலாநிதி பேராசிரியர் எம்.எம்.தீன் முஹம்மத் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வில் அதிதிகளாக, கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விசுவலிங்கம், எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.அப்துல் கபூர், சாவகச்சேரி மாவட்ட நீதிமன்ற நீதிபதி அல் ஹாபிஸ் என்.எம்.அப்துல்லாஹ், தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கவிஞர் சோலைக்கிளி  இலக்கிய அதிதியாகக் கலந்து கொண்டார்.

கவிஞர் கலாபூஷணம் அன்புடீன் அறிமுகவுரையை மேற்கொள்ள, தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் றமீஸ் அப்துல்லா மற்றும் ஆசிரிய ஆலோசகர் என். சும்சுதீன் ஆகியோர் நூல் நயவுரையை வழங்கினார்கள்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--