2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

க.பொ.த உயர்தர மாணவர்களின் பலப்பரீட்சை இன்று ஆரம்பம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2010ஆம் ஆண்டின் க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், நாடு முழுவதிலிருந்தும் சுமார் 2 இலட்சத்து 45ஆயிரம் பரீட்சார்த்திகள் இம்முறை தோற்றுகின்றனர்.

எதிர்வரும் 3ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த பரீட்சைக்காக நாடு முழுவதிலும் 2 ஆயிரத்து 100 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 35 ஆயிரம் பரீட்சை மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இம்முறை பரீட்சையில் 1,70,000 பரீட்சார்த்திகள் பாடசாலை ரீதியாகவும் ஏனையோர் பிரத்தியேகமாகவும் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். இதேவேளை பாதுகாப்பு தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளில் பலரும் இம்முறை உயர்தரப் பரீட்சையில் தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.  ( படப்பிடிப்பு :- பிரதீப் தில்ருக்சன)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--