Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 09 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜமிலா நஜிமுதீன்)
ஐக்கிய தேசிய கட்சியில் இணையுமாறு ஜனநாயக தேசிய முன்னியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஐ.தே.க பிரதி தலைவர் கரு ஜயசூரிய விடுத்த பகிங்கரங்க வேண்டுகோளை சரத் பொன்சேகா நிராகரிப்பதாக ஜ,தே.மு.வின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் யாரும் தனிப்பட்ட ரீதியாக அனுகவில்லை எனவும் இது தொடர்பாக ஜெனரல் யோசிக்கவுமில்லை எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
"இந்த அழைப்பு ஐ.தே.கவின் பிரதி தலைவர் கரு ஜயசூரியவால் மாத்திரம் விடுக்கப்பட்டது. இவ்வழைப்பு மங்கள சமரவீர ஐ.தே.க.வில் இணையும் போதே இந்த பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஜெனரலுக்கு தனிப்பட்ட ரீதியில் எந்தவொரு ஐ.தே.க உறுப்பினரும் அழைப்பு விடுக்கவில்லை" என்றார் ஹேரத்.
ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு தனிப்பட்ட ரீதியில் ஐ.தே.கவில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் எவ்வாறான தீர்மானம் எடுப்பார் என விஜித ஹேரத்திடம் வினவியதற்கு அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டாலும் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படமாட்டது என்றார்.
ஐக்கிய தேசிய கட்சியில் ஜெனரல் சரத் பொன்சேகா இணைந்து கொள்வார் எனும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஐ.தே.க.வில் ஸ்ரீலங்கா சுகந்திர கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர இணைந்து கொண்ட போது நிகழ்வில் ஜெனரல் சரத் பொன்சேகாவையும் ஐ.தே.க.வில் இணையுமாறு கரு ஜயசூரிய பகிங்கரங்க அழைப்பு விடுத்தார். நல்லாட்சியை உருவாக்குவதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமென இதன்போது கரு ஜெயசூரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago