Super User / 2010 ஓகஸ்ட் 09 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது கைப்பற்றப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் சிலவற்றை தாம் பயன்படுத்தி வருவதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட ஏனைய ஆயுதங்களில் சிலவற்றை விற்பனை செய்வதா அல்லது இராணுவத்தினரிடம் கையளிப்பதா என்பது குறித்து பாதுகாப்பு அமைச்சு தீர்மானிக்கும் என இராணுவ ஊடகப்பிரிவைச் சேர்ந்த கேணல் துமிந்த கமகே தெரிவித்துள்ளார்.
பயன்படுத்தப்படக்கூடிய நிலையிலுள்ள ஆயுதங்கள் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கேணல் கமகே தெரிவித்துள்ளார்.
'கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் 3 வகையானவை இருந்தன. பயன்படுத்தப்படக்கூடியவை, சிறு சேதங்கள் கொண்டவை மற்றும் காலாவதியானவை ஆகியனவே கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை நாம் மத்திய ஆயுதக் களஞ்சியத்திற்கு அனுப்புவோம். அவர்கள் எவற்றை வைத்துககொள்ள வேண்டும், எவற்றை அழித்துவிட வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள'; என கேணல் கமமே கூறியுள்ளார்.
வடக்கு கிழக்கில் புலிகளால் ஒளித்து வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான ஆயுதங்களை இராணுவம் கைப்பற்றியுள்ளது. இதேவேளை, நேற்று மாலை கிளிநொச்சி இரணைமடுவிலும் முள்ளியவளையிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது 60 மி.மீ மோட்டார் குண்டுகள் உட்பட பெருந்தொகை ஆயுதங்களை படையினர் கைப்பற்றியுள்ளனர். (DM)
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago