Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 10 , மு.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் நேற்று யாழ். குடாநாட்டுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்றுக் காலை சென்ற இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகளான கே.முரளிகரன், ஏ.சுனில் ஆச்சயா ஆகிய இருவரும் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில்ச் சென்று நிலைமைகளை அவதானித்தனர்.
அத்துடன், பொதுமக்கள் சிலருடனும் இவர்கள் உரையாடினர். இதன் பின்னர் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், பொலிஸ் அதிகாரிகள் ஆகியோரையும் நேற்று மாலை சந்தித்துக் கலந்துரையாடினர்.
யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள், மக்களின் மீள்குடியமர்வு, அபிவிருத்தித் திட்டங்கள் என்பன தொடர்பாகத் தமது திருப்தியை இக்கலந்துரையாடலின்போது இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
8 hours ago
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
30 Oct 2025
30 Oct 2025