Super User / 2010 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் கையளிக்க மறுக்கும் முன்னாள் பிரதியமைச்சர்கள் நால்வருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொதுவிவகார மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு சம்மிட் தொடர் மாடியிலுள்ள இந்த இல்லங்களை கையளிக்காத மேற்படி நான்கு அமைச்சர்களுக்கும் இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி. திசாநாயக்க டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
குறித்த முன்னாள் பிரதியமைச்சர்களுக்கு எதிராக 1969 ஆம் ஆண்டின் அரச சொத்துக்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடிவேல் சுரேஷ், எம்.எஸ்.செல்லச்சாம,. அமீர் அலி உட்பட நான்கு பிரதியமைச்சர்கள் சம்மிட் தொடர்மாடியிலுள்ள இல்லங்களை காலி செய்யாததால் சட்ட நடவடிக்கையை எதிர்நோக்குகின்றனர்.
அதேவேளை, முன்னாள் பிரதியமைச்சர்கள் வஜிர அபேகுணவர்தன, மனோ விஜேரத்ன, ரவி சமரவீர, பந்துல பஸ்நாயக்க ஆகியோர் தமது உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு வாடகை செலுத்தத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
29 minute ago
3 hours ago
jameel Wednesday, 11 August 2010 02:12 AM
கிடைத்த சொஹுசை விட்டுக்கொடுக்க யாருக்குத்தான் மனசு வரும் ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
3 hours ago