2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

பொலிஸ் ஜீப் ஆற்றில் விழுந்ததால் பொலிஸார் மூவர் பலி

Super User   / 2010 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுபுன் டயஸ், அஜித் லால் சாந்த உதய)

பொலிஸ் ஜீப் ஒன்று பாதையைவிட்டு விலகி, கொஸ்வத்த கங்கையில் வீழ்ந்ததால் கலவானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சரத் கம்ஹேவா மற்றும் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள்  பலியாகினர்.

வெதகல எனும் இடத்திலிருந்து கலவானையை நோக்கி அவர்கள் பயணம் செய்துகொண்ருந்தபோதே  இன்றுமாலை 7 மணியளவில்  இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ஜீப்பின் சாரதியான மற்றொரு பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயமடைந்த நிலையில் கலவானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

புல அடி உயரத்திலிருந்து இந்த ஜீப் ஆற்றில் விழுந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்விபத்துக்கான காரணம் என்னவென்பது தெரியவில்லை.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--