Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 ஓகஸ்ட் 11 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறி புலம்பெயர்ந்த தமிழர்களிடம் புலிகள் சார்புக் குழுக்கள் நிதி சேகரிப்பதாக அரசாங்க சமாதான செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர் பேர்னார்ட் குணதிலக்க தெரிவித்துள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் கையெழுத்திட்ட ஆவணங்களைப் பயன்படுத்தி மேற்படி குழுக்கள் நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாகவும் பேர்னார்ட் குணதிலக்க கூறினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, தனது முதலாவது பகிரங்க விசாரணையை இன்று ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
xlntgson Thursday, 12 August 2010 09:54 PM
கவலை நியாமானதுதான். அதற்கு என்னதான் செய்யலாம், இந்த செய்திகளை வெளியிடுவதை அல்லாமல். ஒரு வேளை' வடக்கு கிழக்கு ஆக்கிரமிக்கப்படவில்லை, தமிழர்களும் மற்ற இனத்தவரும் பிரச்சினை இல்லாமல் வாழ்கின்றார்கள்', என்ற செய்தி மேற்கில் வாழும் தமிழரையும் ஏனைய உலகத் தமிழரையும் சென்றடைய உண்மையில் பாடுபடவேண்டும். அதை விடுத்து வடக்கு கிழக்கில் தமிழர் செறிந்து வாழும் வரை இவர்கள் தனி நாடு கேட்பார்கள், அவ்விடங்களை குடியேற்றம் செய்து விட்டால் பிரச்சினை முடிந்துவிட்டது என்று நினைத்தால், அது நடக்காது என்றே நான் நினைக்கின்றேன்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
14 Jul 2025
14 Jul 2025