2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

கல்முனையில் சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற தீர்மானம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எல்.ஏ.அஸீஸ்)

கல்முனை மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற மாநகர சபையின், சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சட்டவிரோத கட்டிடங்களை அகற்றுவதற்கான தீர்மானமும் அங்கீகாரமும் நேற்று நடைபெற்ற மாநகர சபையின் சபை அமர்வுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

மாநகர முதல்வர் எஸ்.இஸட்.எம்.மஷூர் மௌலானா தலைமையில் இடம் பெற்ற இவ்வமர்வில் ஆளும் கட்சி, எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த 17 உறுப்பினர்கள் கலந்து கொண்டபோது அனைத்து உறுப்பினர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதன் முதல் கட்ட நடவடிக்கையாக கல்முனை  பொது நூலகத்திற்கு முன்னால் உள்ள சட்ட விரோத கட்டிடங்கள் அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--