Super User / 2010 ஓகஸ்ட் 11 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரயிலில் பயணம் செய்யும் தமிழ் மக்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் எனக்கூறிக் கொண்டு பணம் நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுவந்த நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சந்தேக நபர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவின் போலி அடையாள அட்டைகளைக் காண்பித்து, ரயிலில் பயணம் செய்யும் தமிழர்களை தெரிவு செய்து அவர்களிடம் பணம் நகைகளை கொள்ளையிட்டு வந்துள்ளனர். பல விசேட பொhலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
வேயாங்கொடை மற்றும் கட்டானை ஆகிய இடங்களில் வைத்து இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொல்காவெல, மீரிகம, வெயாங்கொடை, ராகம மற்றும் கோட்டை ரயில் நிலையங்களில் இச்சந்தேக நபர்கள் இக்கொள்ளைகளை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026