Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு கண்டி மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்திலுள்ள இறைச்சிக் கடைகள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் ஆகியவற்றை இம்மாதம் 15ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை மூடிவிடுவதற்கு கண்டி மாநகர சபை தீர்மானித்துள்ளது.
இலங்கையில் மாத்திரமன்றி முழு உலகிலும் போற்றப்படகூடிய கண்டி எசல பெரஹரா காலத்தின் புனிதத்துவத்தை காப்பாற்றுவதற்காகவே இத்தீர்மானத்தை மேற்கொண்டதாக கண்டி பதில் மேயர் சுமிந்த விக்கிரசிங்க தெரிவித்தார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே நிலங்க தேல, மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர, கண்டி மாவட்ட அரசாங்க அதிபர் கோட்டாபய ஜயரத்ன ஆகியோர் உட்பட நிறுவனத் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டமொன்றின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago