2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

ரணிலின் தாயாரை ஜனாதிபதி பார்வையிட்டார்

Super User   / 2010 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தாயாரை ஜனாதிபதி மஹிந்த இன்று பார்வையிட்டார்.

நோய்வாய்ப்பட்டிருக்கும் திருமதி நளினி விக்கிரமசிங்க, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், வைத்தியசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, திருமதி நளினி விக்கிரமசிங்க குணமடைய வேண்டுமென வாழ்த்துத் தெரிவித்தார். 

ஜனாதிபதி வைத்தியசாலைக்கு விஜயம் செய்யும்போது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அங்கு இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--