Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை - இந்திய மக்களுக்கிடையில் சரியானதொரு புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா தெரிவித்தார்.
இந்தியாவின் 64ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய இல்லத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், அங்கு உரையாற்றிய உயர்ஸ்தானிகர், இந்திய உயஸ்தானிகராலயத்தின் ஆலோசனை பிரிவை யாழ்ப்பாணம் மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் திறக்கவுள்ளதாகவும் கூறினார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்துள்ள மக்களுக்கு இந்திய அரசு 50 ஆயிரம் வீடுகளை கட்டிக்கொடுக்க தீர்மானித்துள்ளது. அத்துடன் யாழ், பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதுடன் தலைமன்னாருக்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான கப்பல் சேவை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். (R.A)
23 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago