2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

மேர்வினின் குற்றச்சாட்டு தொடர்பான நடவடிக்கை என்ன? :ஐ.தே.க.

Super User   / 2010 ஓகஸ்ட் 16 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கெலும் பண்டார)


ஊழல் புரிவதாக முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வாவினால் குற்றம் சுமத்தப்பட்ட  சமுர்த்தி உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதை பகிரங்கமாக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.


சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் சிலர் மோசடி நடவடிக்கைகள் மூலம் இலகுவாக பணம் சம்பாதிப்பதாக மேர்வின் சில்வா அண்மையில் கூறியிருந்தார்.


இக்குற்றச்சாட்டு பாரதூரமானதாகும் என இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஐ.தே.க. ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க எம்.பி. தெரிவித்தார்.


அதேவேளை, சமுர்த்தி நிவாரணம் பெறும் ஏழை மக்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்காக அரசியல் வேலைகளைச் செய்வதற்கு சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் சிலர் தூண்டுவதாகவும் கயந்த கருணாதிலக்க குற்றம் சுமத்தினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--