Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுத்தம் காரணமாக விதவையானவர்களுக்கான வீட்டுத் திட்ட கடனுதவியொன்றை வழங்க புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
புனர்வாழ்வு அதிகார சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கடனுதவித் திட்டத்தின் பிரகாரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கான குறைந்த வட்டியில் கடனைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.
யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காகவே இந்த கடனுதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவித்த அமைச்சர், இதனை அடுத்த மாதம் முதல் இலங்கை வங்கியினூடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறினார்.
39 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago
4 hours ago