2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

மாகாண சபை அமைச்சர்களுக்கு மேலும் சலுகை வேண்டாம் : ஐ.தே.க.

Super User   / 2010 ஓகஸ்ட் 17 , பி.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஒலிந்தி ஜயசுந்தர)


மாகாண சபை அமைச்சர்கள் சொற்ப வேலைகளையே செய்வதால் அவர்களுக்கு மேலும் சலுகைகள் வழங்க வேண்டாம் என அரசாங்கத்தை ஐ.தே.க. கோரியுள்ளது.


"மாகாண சபை அமைச்சர்களுக்கு பெருந்தொகைப் பணம் செலவிடப்படுகின்ற போதிலும் அவர்கள் மேலும் சலுகைகளை கேட்டுக்கொண்டேயுள்ளனர். மத்திய அரசாங்க அமைச்சர்களுக்கு கிடைக்கும் சகல உரிமைகள், சலுகைகளையும் அவர்கள் கேட்கின்றனர்" என ஐ.தே.க.வின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஸ்ரீலால் லக்திலக கூறினார்.


ஒரு மாகாண சபை அமைச்சருக்காக வருடாந்தம் 12 மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது. நாளொன்றுக்கு அவர்களுக்காக 239,000 ரூபா செலவிடப்படுகிறது. அதன்படி வருடமொன்றுக்கு 182 மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது. என அவர் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--