2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

சென்னை நீதிமன்றம் இலங்கையர் அறுவருக்கு சிறைதண்டனை விதிப்பு

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 18 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அனுதாபிகள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த இலங்கையர்கள் அறுவரை குற்றவாளிகள் என அடையாளம் கண்ட, சென்னை, தாம்பரம் நீதிமன்றம் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு வருட சிறைதண்டைனையை விதிக்க தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு சென்னையிலுள்ள கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்த அறுவருக்கும் எதிரான வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்ட நிலையிலேயே அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர்.

தம்பியண்ணா, செஞ்ஜேம்ஸ், ஜெயக்குமார், புஷ்பதனராஜ், பூமிநாதன் மற்றும் ரவிக்குமார் ஆகிய அறுவருமே இவ்வாறு குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களாவர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளை மேற்கொள்ளும் நோக்கத்தில், தமிழ் நாட்டின் தென் பகுதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட படகு ஒன்றின் மூலம் ராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு பயணிக்க முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இவர்கள், தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--