Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 19 , மு.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் மேர்வின் சில்வாவின் பதவி குறித்த கூட்டம் ஒன்றை கொழும்பில் நடத்துவதற்கு கம்பஹாவிலுள்ள பௌத்த குருமார்கள் ஒன்றிணைந்து திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்த மாநாடு நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதுடன் இம்மாநாட்டில் பௌத்த குருமார்கள் இணைந்து கையொப்பமிட்ட மனு ஒன்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கவுள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
இந்த மனுவில் 1,500 உறுப்பினர்கள் கையொப்பமிடவுள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார். கடந்த வாரங்களில் டெங்கு ஒழிப்பு குறித்த சிரமதான பணிகளில் கலந்து கொள்ளாத சமுர்த்தி உத்தியோகஸ்தரை மரத்தில் கட்டி வைத்ததன் காரணமாக முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வாவின் பிரதி அமைச்சர் பதவி பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
17 minute ago
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
37 minute ago
2 hours ago