2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

புகை பொருட்களின் விற்பனையற்ற புழுதிவயல் கிராமத்தின் கடைகள்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)
    
கல்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட புழுதிவயல் கிராமத்திலுள்ள கடைகளில் சிகரட், பீடி, சுருட்டு, புகையிலை போன்ற புகை பொருட்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

புழுதிவயல் பட்டானி சாஹிப் ஜும்ஆ மஸ்ஜிதின் கீழ் இயங்கும் அனைத்து மஹல்லா நிர்வாகக் குழு, அக்கிராம மக்களின் நன்மை கருதி பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில். புகைப் பழக்கத்தினால் ஏற்படும் தீங்குகள், விபரீதங்கள் தொடர்பில் கிராமவாசிகளுக்கும், கடை உரிமையாளர்களுக்கும் விளக்கியதை அடுத்து புழுதிவயல் கிராமத்திலுள்ள 24 கடைகளிலும் இந்த பொருட்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று நோன்பு காலங்களில் தேநீர், உணவு மற்றும் பட்டாசு போன்றவற்றின் விற்பனையும்  நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த தீர்மானத்திற்கு கடை உரிமையாளர்கள் முழு ஆதரவினை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X