Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 19 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சியின் தலைவர் அப்துல் ரசூல் இன்று மாலை சுகவீனம் காரணமாக காலமானார்.
இவர் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் முஸ்லிம் ஜனாதிபதி வேட்பாளரானார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சி கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பொது முன்னணியின் பங்காளி கட்சிகளில் ஒன்றாக விளங்கியது.
தமிழ், சிங்கள மொழிகளில் சிறந்த பேச்சாளரான அப்துல் ரசூல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக குருநாகல் மாவட்டத்திலிருந்து வடமேல் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட முதல் முஸ்லிம் ஆவார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயக தேசிய கூட்டமைப்பு சார்பாக, இவர் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டார்.
இவரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை கொழும்பு -07 ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
36 minute ago
39 minute ago
44 minute ago
2 hours ago
xlntgson Friday, 20 August 2010 08:26 PM
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். சிங்களத்தில் நல்ல புலமை மிக்கவர். அவரது அரசியல் கொள்கையோடு எனக்கு உடன்பாடில்லாவிட்டாலும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
39 minute ago
44 minute ago
2 hours ago