2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

கண்டி மேலதிக நீதிபதி: சேவையிலிருந்து இடைநிறுத்தம்

Super User   / 2010 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.பாருக் தாஜுதீன்)

கண்டி மேலதிக நீதிபதி ரொஹான் ஜயவர்தன சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் அங்கத்தவர் ஒருவர் டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.

இந்நீதிபதி தொழிற்சார் பணிகளில் அசட்டையாக செயற்பட்டமையே இதற்குக் காரணம். பொதுமக்களிடமிருந்தும் சட்டத்தரணிகளிடமிருந்து அவருக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் மேற்படி பேச்சாளர் டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.

இந்நீதிபதியின் செயற்பாடுகள் குறித்து பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா செய்த புகாரையடுத்து இது தொடர்பாக விசாரிப்பதற்காக உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம்,  நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ண ஆகியோரை நீதிச்சேவைகள் ஆணைக்குழு நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்விசாரணைகளின் மூலம், முக்கிய தீர்ப்புகள் பலவற்றை வழங்குவதில் வேண்டுமென்ற தாமதம் செய்யதமை உட்பட பல விடயங்களில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை வேறு பல நீதிபதிகள் நீதவான்களுக்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பாக நீதிச்சேவைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது எனவும் மேற்படி பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0

 • Jeya Saturday, 21 August 2010 01:31 AM

  நீதிபதியே குற்றவாளியானாரா?

  Reply : 0       0

  shan Saturday, 21 August 2010 10:45 AM

  நீதிபதியே குற்றவாளிகூன்ரில் நிற்றகவேண்டி நிலமையாயின் குற்றவாளி எந்த கூன்றில் நிற்பது ,

  Reply : 0       0

  xlntgson Saturday, 21 August 2010 08:39 PM

  கடமையை சரிவரக்கவனிக்கவில்லை என்பது குற்றச்செயல் அல்ல, என்றாலும் வேலையை விட்டு நீக்கலாம். குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் கூட மென்மையான முறையில் அவரது நீதிபதி அந்தஸ்தை நீக்கியே பின்னர் அவர் மீது குற்றப்பத்திரிகை வழங்கப்படும். யாரும் எதையும் அதற்கு முன்பதாகவே யூகித்துக்கொள்ளலாம்! பொதுவாக நீதிபதி ஒருவரை நீதிபதி கமிஷன் நீக்குவதில்லை. இவர் சட்ட நடவடிக்கைகளை குழப்பியதில் ஏதேனும் உள் நோக்கம் இருந்ததா, என்று போகப்போகத்தான் தெரியும். ஒரு காலத்தில் மது பாவனை உள்ள நீதிபதிகளையும் விலக்கிவிடுவார்கள்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--