Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Super User / 2010 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, இலங்கை மீனவர் சங்கங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையொன்று தற்போது சென்னையில் நடைபெறுகிறது.
நேற்று ஆரம்பமான இப்பேச்சுவார்த்தை நாளை ஞாயிற்றுக்கிழமை வரை தொடரவுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்தல், மீனவர்கள் மீதான தாக்குதல் ஆகியன் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன.
இப்பேச்சுவார்த்தைகள் குறித்து, இலங்கைப் பிரதிநிதிகளின் தலைவர் கே. சூரியகுமார் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், பாக்கு நீரிணையில் மீன்வளங்கள் குறைந்து வருவது இலங்கையின் வடமாகாணத்திலுள்ள மீனவர்களின் ஜீவனோபாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார்.
அப்பாவி மீனவர்கள் கடற்படையினரால் கொல்லப்படுவதற்கு எதிராக இலங்கை மீனவர்கள் குரல் எழுப்பியதாகவும் சூரியகுமார் தெரிவித்தார்.
'இலங்கை அரசாங்கம் கடல் எல்லைகளை வகுத்துள்ளது. மீறல் சம்பவங்கள் இடம்பெற்றால் அவை சட்டத்தின்படி கையாளப்பட வேண்டும். இப்பிரச்சினையை பேசித் தீர்க்க வேண்டியது இரு நாடுகளின் அரசாங்கங்களின் பொறுப்பாகும்' என அவர் கூறினார்.
தென்னிந்திய மீனவர் சம்மேளனத்தின் ஆலோசகர் விவேகானந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாக்கு நீரிணையின் இரு புறங்களிலுமுள்ள மீனவர்களின் பிரச்சினைகளை புரிந்துகொள்வதற்கும் பிரச்சினைகளைக் குறைப்பதற்கான திட்டங்களை முன்மொழிவதற்குமான தீவிர முயற்சியொன்றே இம்மாநாடு எனக் கூறினார்.
இப்பேச்சுவார்த்தைகளில் வட இலங்கையைச் சேர்ந்த 24 மீனவர்கள் பங்குபற்றுகின்றனர். இந்தியத் தரப்பில் இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மற்றும், நாகபட்டிணம் ஆகிய இடங்களைச் சேர்ந்த மீனவர்கள் பங்குபற்றுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago
1 hours ago