2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

இலங்கைத் தூதரக நிதிமோசடி குறித்து விசாரணை

Super User   / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இத்தாலியிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 13 மில்லியன் ரூபா மோசடி தொடர்பாக விசாரணைகள் தொடர்வதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தன.

இலங்கை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்ட கணக்குத் தணிக்கையின் மூலம், சுமார் 93,000 யூரோ மோசடி இடம்பெற்றமை கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகறிது.

இலங்கையர்கள் பலரிடமிருந்து தனக்கு கிடைத்த புகாரையடுத்து திடீர் நிதியியல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் ஹேமந்த வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

அதையடுத்து, நிதிமோசடிகள் இடம்பெற்றிருப்பது தெரியவந்ததாகவும் அது குறித்து வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--