Super User / 2010 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மது அரசியல் புகலிடக் கோரிக்கையை நிராகரிக்கும் தீர்மானத்தை மீள்பரிசீலணை செய்யுமாறு அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றத்தில் இலங்கைத் தமிழர்கள் இருவர் இன்று மேன்முறையீடு செய்துள்ளனர்.
அத்துடன், தமது புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் அவுஸ்திரேலியாவுக்கு வெளியே வைத்து கையாளப்படுவது நியாயமற்றது எனவும் அவர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
கடந்த வரும் ஒக்டோபர் மாதம் முதல் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இவ்விருவரும் இலங்கைக்கு நாடுகடத்தப்படும் நிலையை எதிர்நோக்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தாம் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டால், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டு காரணமாக இலங்கையில் தமக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என மேற்படி நபர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, புகலிடம் கோரும் தமிழர்களுக்கும் ஈராக்கிற்கு நாடுகடத்தப்படும் நிலையை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கும் ஆதரவு தெரிவித்து சுமார் 40 பேர் சிட்னி நகரிலுள்ள நீதிமன்றத்திற்கு வெளியே திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
15 minute ago
43 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
43 minute ago
55 minute ago