2025 டிசெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

மிளகாய் விலைகள் 2,000 ரூபாய்

Editorial   / 2025 டிசெம்பர் 28 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிட்வா சூறாவளிக்குப் பிறகு காய்கறி சாகுபடியில் ஏற்பட்ட கடுமையான தாக்கத்தால், சில காய்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக ஹட்டன் பகுதி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழ​மை (28) அன்று, உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய், மூட்டைக்கொச்சிக்காய்   ரூ. 2000 சில்லறை விலையில் விற்கப்படுகின்றன. அதே நேரத்தில் ஒரு கிலோ கிராம் கறிக்கொச்சிக்காய் ரூ. 1300க்கு விற்கப்பட்டது.

ஒரு கிலோ கிராம் போஞ்சி ரூ. 800க்கும், ஒரு கிலோ சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ. 700க்கும்மை அனைத்து வகையான தாழ்நில காய்கறிகளும் ரூ. 600-800க்கும், ஒரு கிலோ கிராம் தக்காளி ரூ. 800க்கும் விற்கப்படுகின்றன.

இதற்கிடையில், நுவரெலியா பொருளாதார மையம் விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ கிராம் முட்டைக்கோஸை ரூ. 210க்கும், கேரட் ரூ. 200க்கும், லீக்ஸ் ரூ. 240க்கும், முள்ளங்கி ரூ. 150க்கும், பீட்ரூட் ரூ. 180க்கும், பீட்ரூட்/வெட்டல் ரூ.    500க்கும், உருளைக்கிழங்கு - ரூ. 270 க்கும், சிவப்பு உருளைக்கிழங்கு - ரூ. 280க்கும், நோகோல் - ரூ. 250க்கும் கொள்வனவு செய்கின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X