2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

பகல்கொள்ளையில் ஈடுபட்ட திருடன் கைது

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(குஷால் சமத்)

20 பகல்கொள்ளையுடன் தொடர்புடையவரும் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பகல்க் கள்வன் ஒருவன் மாகந்தன பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த திருடன் வீடொன்றை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றதுடன்,  வீட்டிலிருந்த பெண்மணியையும் பிள்ளைகளையும் அச்சுறுத்தி விட்டு பகல்க்கொள்ளையில் ஈடுபட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கூறினார்.

கொட்டகெதற, பட்டகெத்தற, மடபத ஆகிய பகுதிகளில் குறித்த திருடன் கொள்ளைச் சம்பவத்தில்  ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து, 2 மோட்டார் சைக்கிள்கள், 15 செல்லிடத் தொலைபேசிகள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .