Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 25 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பாருக் தாஜுதின்,எலஸன் அமரசிங்க)
சக்வித்தியின் பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றியும் பிள்ளைகளுக்கு ஆங்கில மொழிமூல கல்வி வழங்குவது பற்றியும் நீதிமன்றில் அறிக்கை ஒன்றை சமர்பிக்கும்படி நுகேகொட நீதவான் றோகன அநுரகுமார கல்கிசை பிரிவு சிறுவர் நன்னடத்தை கவனிப்பு உத்தியோகத்தருக்கு இன்று பணிப்புரை வழங்கினார்.
கல்கிசை சிறுவர் நன்னடத்தை கவனிப்பு உத்தியோகத்தர் முன் சமர்பித்த அறிக்கை ஒன்றில் ஆங்கில மொழிமூலம் படித்த இரண்டு பிள்ளைகளும் சிங்களத்தில் படிக்க சிரமப்படுவதாக கூறியதையடுத்தே நீதவான் இந்த அறிவித்தலை வழங்கினார். இதை தொடர்ந்து மேல்மாகாண சிறுவர் நன்னடைத்தை ஆணையாளர் இந்த பிள்ளைகளுக்கு பொருத்தமான ஆங்கில மொழிமூலம் கல்வியூட்டும் சிறுவர் அபிவிருத்தி நிலையமொன்றை பெயர் குறித்து கூறினார்.
அவர் பிள்ளைகளுக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கு ஒரு உதவி பொலிஸ் அத்தியட்சகரையும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியையும் பெயர் குறிப்பது அவசியமாகும் என கூறினார். இதைத் தொடர்ந்தே நீதவான் பிள்ளைகளின் பாதுகாப்பு ஆங்கில மூல கல்வி தொடர்பான முன்னேற்றம் பற்றிய அறிக்கையை அடுத்த தவணையின் போது நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு கூறினார்.
3 minute ago
35 minute ago
47 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
35 minute ago
47 minute ago
58 minute ago