2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

மது பாவனை நோய்களுக்கு இலவச சிகிச்சை கிடையாது

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 26 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சந்துன் ஏ.ஜயசேகர)

மதுபாவனையால் ஏற்பட்டமை என கண்டறியப்பட்ட நோய்களுக்கு 2011 ஜனவரி மாதத்திலிருந்து அரசாங்க வைத்தியசாலைகளில் இலவச சிகிச்சை வழங்கப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

தொற்று நோய் என்ற வகைக்குள் அடங்காத நோய்களில் பெரும்பாலானவை மது பாவனையால் விளைந்தவை. மதுபாவனையை குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

மது பாவனையால் உண்டாகும் நோய்களுக்கு சிகிச்சை நாடி வருவோர் தொகை அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே மதுபாவனையால் உண்டான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பணம் அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

550 தாதிய பயிலுநர்களை பயிற்சிக்காக கண்டி தாதியப் பயிற்சி பாடசாலையில் அனுமதிக்கும் நிகழ்விலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். இலங்கையில் வருடந்தோறும் 2,000 பேர் மதுபாவனையால் மரணிக்கின்றனர் என அமைச்சர் கூறினார்.
 
 


  Comments - 0

  • xlntgson Thursday, 26 August 2010 09:39 PM

    அத்துடன் மதுக்கடைகளில் போத்தல் கணக்கில் விற்காமல் மருத்துவரின் சான்றிதழுக்கு மட்டுமே வழங்கவேண்டும். பொய்சான்று மருத்துவர்களுக்கு இலட்சக்கணக்கில் அபராதம் விதிக்கவேண்டும். மதுவுக்கு ரேஷன் முறை கொண்டு வந்தால் நல்லது. அதில் நல்ல வருமானம் தேடும் எண்ணம் அரசுக்கு இருக்கக்கூடாது. அரசியல்வாதிகள் கொள்ளை இலாபம் அடிக்கும் தொழில் ஏழை நாடுகளில் இதுவே! உஷ்ண நாடுகளுக்கு மது அறவே தேவை இல்லை என்றாலும் மது தொழில் புரிவோர் நன்மையையும் கருதியே இதை ஒழிக்க முடியாமல் இருக்கிறது. அறநெறி எப்போதும் பொருளாதாரத்தோடு முரண்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--