2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

புலம்பெயர் தமிழர்களை டேவிட் மிலிபான்ட் சந்திக்கவுள்ளார்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 27 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜமீலா நஜ்முதீன்)

பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்களை அடுத்த வாரமளவில் பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

டேவிட் மிலிபான்டுடன் பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவிருப்பதாக மின்னஞ்சல் அழைப்பொன்றில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற் கட்சியின் தலைவரும் எதிர்காலத்தில் பிரித்தானிய பிரதமராகக்கூடும் எனக் கருதப்படுபவருமான டேவிட் மிலிபான்டுடனான இந்த சந்திப்பு தமிழ்ச் சமூகத்திற்கு சிறந்ததொரு சந்தர்ப்பம் எனவும் 'தொழிலாளர்களுக்கான தமிழர்கள்' விடுத்த மின்னஞ்சல் அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி  இந்த சந்திப்பு இடம்பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக மின்னஞ்சல் அழைப்பில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் உலகத் தமிழ் பேரவையின் மாநாட்டில் டேவிட் மில்லிபான்ட் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.

 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X