Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
A.P.Mathan / 2010 செப்டெம்பர் 02 , பி.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(Sherwani Synon)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 59ஆவது வருடாந்த மாநாடு வியாழக்கிழமை அலரிமாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அழைக்கப்பட்டிருக்கவில்லை. அதேசமயம், இந்நிகழ்வில் அலங்கரிக்கப்பட்ட மேடையில், முன்னாள் கட்சியின் தலைவர்களான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மற்றும் தற்போதைய தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முன்னர் அக்கட்சியின் தலைவியாக இருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஓவியம் புறக்கக்கணிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை தொடர்புகொண்டு கேட்டபோது…
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வருடாந்த கூட்டத்திற்கு என்னை யாரும் அழைக்கவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் செயற்படுகின்ற கட்சி என்ற ரீதியில் அவர்கள் என்னை அழைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எந்தவிதமான அழைப்பிதழும் எனக்குக் கிடைக்கவில்லை. நிகழ்வில் வைக்கப்பட்டிருந்த பாரிய பதாதையில் என்னை எதற்காக புறக்கணித்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏன் என்மீது விரோதம் காண்பிக்கிறார் என்று தெரியவில்லை. அவர் என்னிடம் நேரடியாக எதையும் இதுவரை தெரிவிக்கவுமில்லை. அவர் ஏன் என்னை தொடர்ந்து புறக்கணிக்கிறார் என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை.
கட்சியில் உள்ளவர்களுக்கு நன்றாக தெரியும்... தற்போதைய ஜனாதிபதிக்கு எவ்வளவு உதவி செய்தேன் என்று. ஒரு சிலரைத்தவிர ஏனைய உறுப்பினர்கள் அவருக்கு தலைமைத்துவத்தை கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையும் மீறி நான் செய்த உதவிக்கு அவர் காட்டும் நன்றிக்கடன் இதுதானா… என்று குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்சியினையும் நாட்டையும் வழிநடந்துவது பற்றி வருந்துகிறீர்களா என்று முன்னாள் ஜனாதிபதியிடம் கேட்டபோது… ‘என்னுடைய சுயசரிதையை எழுதும்போது நீங்கள் அதை அறிந்துகொள்வீர்கள்…’ என்று குறிப்பிட்டார்கள்.
முன்னாள் ஜனாதிபதியின் இக்கருத்துக்கள் தொடர்பாக விவாதிப்பதற்காக பிரதமர் டி.எம்.ஜயரத்ன மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரை தொடர்புகொண்டபோதும் அவர்களை எங்களால் அணுகமுடியவில்லை.
Mohamed Friday, 03 September 2010 02:22 PM
ஏதோ உங்களின் பெற்றோர்களையாவது கண்ணியப்படுத்தினார்கள் என்பதில் சந்தோசமடையுங்கள்.
Reply : 0 0
xlntgson Friday, 03 September 2010 08:51 PM
அவராக வருவார் என்று எதிர்பார்த்திருப்பார்களாக இருக்கும், என்னத்துக்கு அழைப்பு அதுஇது எல்லாம், என்ன? கட்சியின் மீது பற்று என்றால் 'கலெறி'யிலாவது அமர்ந்து இருக்கலாமே, எல்லாரும் தர்மசங்கடத்துக்கு உள்ளாகி இருப்பார்கள். அவருக்கு ஊடகங்கள் நல்ல பார்வையை ஏற்படுத்திக்கொடுத்து இருப்பார்கள். அழைப்பின்றி போகாமல் இருக்க இது என்ன குடும்ப திருமணமா? சொல்லி ஒன்றுக்கும் சொல்லாமல் ஒன்றுக்கும் போகவேண்டும் என்பது பழமொழி. இது எல்லாருக்கும் சொல்லிக்கொண்டு போக வேண்டிய நிகழ்ச்சியா? கட்சி அழைக்குமா, கட்சி உரிமை யாருடையது?
Reply : 0 0
waz Saturday, 04 September 2010 01:32 AM
மீண்டும் ஒரு முறை வாருங்கள், நாம் என்றும் உங்களுடன் தான்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
01 Jul 2025