Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 06 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்க்கட்சியினர் வலிமையான வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் வரை, எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்களிலும் தான் போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஆசிரியர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் முன்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது, 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஐ.தே.க. அதிக எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
xlntgson Monday, 06 September 2010 08:57 PM
இன்னும் ஏழு ஆண்டுகள் இருக்கின்றன, எல்லா திருத்தங்களும் போதுமான மெஜாரிட்டி இருக்கையில் சட்டம் ஆகிவிடும். அதை நிறைவேற்றினால் சில காலம் சென்று அதையும் சரி இல்லை என்று திருத்த தான் போகிறார்கள். பாராளுமன்றத்தின் ஆயுளை கூட்ட கருத்து கணிப்பு நடத்தாமல் இருந்தால் சரி. மக்கள் கருத்து கேட்பதும் சில நேரங்களில் தேர்தலுக்கு பதிலாக செய்யப்பட்டு அதுவும் ஜனநாயகம் என்று கூறப்படும் நகைச்சுவை எல்லா நாடுகளிலும் உண்டு. அதை மிக முக்கியமான விடயங்களில் கேட்க மாட்டார்கள் உ-ம். மரணதண்டனையை நிறைவேற்றுவது அவசியமா?
Reply : 0 0
xlntgson Tuesday, 07 September 2010 09:21 PM
இலங்கை சர்வாதிகாரத்தை நோக்கி போகிறது என்று கூறுகின்றவர்கள் பொது வேட்பாளர் ஒருவரை தேட வேண்டும் என்று ஜனாதிபதி கூறிஇருப்பது அவர் சிறந்த ஜனநாயகவாதி என்பதை காட்டுகிறது. இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் செயல்படலாமே? கட்சி சார்பின்மையை நோக்கி போவதாகவும் இந்த திருத்தங்களை கருத முடியாதா? தேசிய அரசு கேட்டார்களே அது போல! உள் கட்சி ஜனநாயகம்இருந்தால் அது போதும் ஜனநாயகத்தை காப்பாற்ற, கட்சிகளில் எந்த கட்சி ஜனநாயகமாக செயல்படுகிறது? தனது உறவினரை தவிர அவர்கள் செயலாளராக கூட நியமிப்பதில்லை. வெறும் பேச்சு..
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
55 minute ago
1 hours ago