Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 09 , மு.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேற்று அரசாங்கத் தரப்புக்கு மாறிய ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மை கட்சியை விட்டு நீக்கினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளனர்.
ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஏர்ல் குணசேகர, இது தொடர்பாக டெய்லி மிரர் இணையத்தளத்திடம் பேசுகையில், ஐ.தே.கவின் பல உறுப்பினர்கள் ஏற்கெனவே அரசாங்கத் தரப்புக்கு மாறி இன்னும் அரசாங்கத்துடன் உள்ள நிலையில் தமது உறுப்புரிமையை நீக்குவதற்கு கட்சிக்கு உரிமையில்லை எனக் கூறினார்.
அரசாங்கத் தரப்புக்கு மாறியதன் அடிப்படையில் கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கப்பட்ட ஒரு அங்கத்தவரின் பெயரையாவது கூறுமாறும் ஐ.தே.க. தலைமைத்துவத்திற்கு அவர் சவால் விடுத்தார். அத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதானால் தற்போதைய பிரதித் தலைவர் கரு ஜயசூரிய சில வருடங்களுக்கு முன் அரசாங்கத்துடன் இணைந்தமைக்காக கட்சி அங்கத்துவத்தை இழக்க வேண்டியிருக்கும் என ஏர்ல் குணசேகர, கூறினார்.
இதேவேளை, கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளத் தயங்கப்போவதில்லை என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் மனூஷ நாணயக்காரவும் எச்சரித்தார். அத்துடன் மேலும் பல ஐ.தே.க. எம்.பிகளும் அரசாங்கத்துடன் இணைவர் என எதிர்பார்க்கப்படுவதகாவும் அவர் கூறினார்.
ஏர்ல் குணசேகர, மனூஷ நாணயக்கார, லக்ஸ்மன் செனவிரட்ன, அப்துல் காதர் ,உபேக்ஷா சுவர்ணமாலி , என்.விஜேசிங்க ஆகிய 6 ஐ.தே.க. எம்.பிகள் நேற்று நாடாளுமன்றத்தில் அரசாங்கத் தரப்புக்கு மாறியமை குறிப்பிடத்தக்கது.
6 minute ago
37 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
37 minute ago
40 minute ago
1 hours ago