Editorial / 2026 மே 14 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்
யாழ் நகரின் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மலசலகூடத் தொகுதியை நிர்வகிப்பதில், இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச) மற்றும் யாழ் மாநகரசபை ஆகியவற்றுக்கு இடையே இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான தீர்வைக்காண சட்ட ஆலோசனைகளைப் பெற யாழ் மாநகரசபை தீர்மானித்துள்ளது.
இன்று நடைபெற்ற மாநகரசபையின் மாதாந்தக் கூட்டத்தில் இவ்விடயம் குறித்துப் பேசிய முதல்வர் திருமதி மதிவதனி, சட்ட ரீதியான ஆலோசனைகளைப் பெறுவதற்கான அனுமதி முன்மொழிவைச் சமர்ப்பித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஈ.பி.டி.பி உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான திருமதி யோகேஸ்வரி, "இது மக்கள் நலன் சார்ந்த விடயம் என்பதால், இரு தரப்பையும் ஒரு சமரசத்திற்கு உட்படுத்தித் தீர்வு காண வேண்டும். சட்ட ரீதியான நடவடிக்கைகள் காலத்தை வீணடிப்பதோடு, திட்டத்தின் நோக்கத்தையும் பாதிக்கும்," என வலியுறுத்தினார்.
மேலும், சட்ட ஆலோசனை பெறப்படும் பட்சத்தில், அது சபையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அதன் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, இவ்விடயம் தொடர்பாகச் சட்ட ஆலோசனைகளை மட்டும் பெறாமல், நேரடியாகவே சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என உறுப்பினர் மதுசிகன் வலியுறுத்தினார்.
எனினும், இவ்விவகாரத்தில் முதலில் சட்ட ஆலோசனையைப் பெற்று, அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நகர்வுகளை மேற்கொள்வதெனச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
8 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
24 minute ago