2026 மே 14, வியாழக்கிழமை

dd

காதலர்களே இலக்கு:இளம்பெண் வன்புணர்வு; இருவர் கைது

Editorial   / 2026 மே 14 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்ல  பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் இளம் காதலர்களை அச்சுறுத்தி, பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இருவரை எல்ல பொலிஸார் சுற்றிவளைப்பின் மூலம் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சந்தேக நபர், ஒரு இளம் ஜோடியை அச்சுறுத்தி, அந்த இளம்பெண்ணை அடர்ந்த காட்டுப் பகுதிக்குக் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

மற்றொரு இளம் ஜோடியிடமிருந்து சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களை இவர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

மேலும், தங்களைப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டு, பல இளம் ஜோடிகளிடமிருந்து கைப்பேசிகளையும் பல்வேறு சொத்துகளையும் இவர்கள் அபகரித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள்: கைது செய்யப்பட்டவர்கள் ஹாலி-எல பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 33 வயதுடைய இருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .