Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 09 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
பாணின் விலை மூன்று ரூபாவால் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. நாணயக்கார தெரிவித்துள்ளார்.
'பேக்கரி உரிமையாளர்களுக்கு 50 கிலோகிராம் கோதுமை மாவிற்கு வழங்கப்பட்ட 225 ரூபா விலைக்கழிவு வழங்கப்பட்டது. எனினும் ஒரு கிலோ மாவின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதன் மூலம் இவ்விலைகழிவு 150 ரூபாவால் குறைந்துவிட்டது. பாணின் புதிய விலை 41 முதல் 45 ரூபாவாக இருக்கும்' என அவர் கூறினார்.
'பாண் விற்பனை 50 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. நாம் இடை நபர்கள் மூலம் இவற்றை விற்க வேண்டியுள்ளது. உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில் பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு பாண் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானிக்கும். நிச்சயமாக விலை அதிகரிப்பை எதிர்பார்க்க முடியும்' எனவும் என்.கே. நாணயக்கார கூறினார்.
இது குறித்து நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் திருமதி சந்திரிக்கா திலகரட்ணவிடம் கேட்டபோது இவ்விடயம் குறித்து நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் விலை அதிகரிப்பு குறித்து தெரியாது எனவும் கூறினார்.
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago