Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 10 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பாரூக் தாஜுதீன்)
பாதுகாப்புப் படைகளைப் பற்றி விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தகவல் கொடுத்ததாகவும் தன்வசம் கைக்குண்டுகளை வைத்திருந்ததாகவும் சந்தேகிக்கப்படும் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரை 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் பிரசன்ன அல்விஸ் கட்டளையிட்டுள்ளார்.
இவரை, களனி திஸ்ஸ மின் நிலையத்தில் வைத்து படை வீரர்கள் கடந்த ஓகஸ்ட் 11ஆம் திகதி கைது செய்தனர். பின்னர் இவர் கொழும்பு குற்றப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். குற்றப்பிரிவினர் இவரைத் தடுத்து வைத்து புலன் விசாரணை மேற்கொண்டனர்.
உதவி பொலிஸ் பரிசோதகர் நுவன் ஸ்ரீபதி, சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்து விசாரணை முடியாதபடியால் இவரைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கும்படி நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டார்.
நீதவான் மேற்படி நபரை செப்டெம்பர் 23 வரை விளக்கமறியலில் வைக்கப் பணித்தார்.
1 hours ago
3 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
15 Nov 2025