Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஈ.அமரசிங்க)
சக்வித்தி குழும நிறுவனங்களால் வழங்கப்பட்டு, பணம் வழங்கப்படாமல் போன காசோலைகளின் விபரங்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவிக்குமாறு அந்நிறுவனத்தின் நான்கு வங்கிகளுக்கு நுகேகொடை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை வங்கி, சம்பத் வங்கி, நேஷசன்ஸ் ட்ரஸ்ட் வங்கி, ஹற்றன் நெஷனல் வங்கி ஆகியவற்றின் நுகேகொடை கிளைகளின் முகாமையாளர்களுக்கு நுகேகொடை நீதவான் அனுர குமார ஹேரத் இந்த உத்தரவை இன்று பிறப்பித்தார்.
சக்தி நிறுவனத்தில் பணம் வைப்புச் செய்தவர்களுக்கு அந்நிறுவனத்தினால் வழங்கப்பட்ட காசோலைகள் வங்கிகளில் சமர்ப்பிக்கப்பட்டபோது அவற்றுக்குப் பணம் பெற முடியவில்லை என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.
மேற்படி குழும நிறுவனங்களால் மோசடி செய்யப்பட்ட தொiயை மதிப்பிடுவதற்காக இவ்விபரங்கள் தேவைப்படுவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
சக்திவித்தி ரணசிங்க 2036 வைப்பாளர்களிடம் சுமார் 105 பில்லியன் ரூபாவை மோசடி செய்திருப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சக்திவித்தி ரணசிங்கவும் அவரின் மனைவி குமாரி அனுதாராவும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago