Super User / 2010 செப்டெம்பர் 16 , பி.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராணுவ உறவுகளைப் பலப்படுத்துவதற்கு சீனாவும் இலங்கையும் இன்று இணங்கியுள்ளன. இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் (பி.எல்.ஏ.) பிரதம பொது அதிகாரிகளின் தளபதி சென் பிங்டேவுக்கும் இடையிலான சந்திப்பின்போது இது குறித்து கலந்துரையாடப்பட்டது.
சீன-இலங்கை இராணுவ உறவுகள் அண்மைக்கால வருடங்களில் தொடர்ச்சியான ஐக்கியமும் அபிவிருத்தியும் காணப்பட்டதாக சென் பிங்டே கூறினார்.
தாய்வான் திபெத் விவகாரங்களில் சீனாவுக்கு இலங்கை ஆதரவு தெரிவிப்பது குறித்து அவர் நன்றி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கிடையிலான ஆயுதப்படைகளுக்கிடையிலான பரஸ்பர நட்புணர்வு பரிமாற்றங்களையும் ஒத்துழைப்புகளையும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago