A.P.Mathan / 2010 செப்டெம்பர் 17 , பி.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(றிபாயா நூர்)
கரடியனாறில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் கையளிக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ராமகமலன் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று மாலை மட்டக்களப்பு மற்றும் செங்கலடி வைத்தியசாலைகளுக்கு விஜயம்செய்த நீதிபதி, மரண விசாரணை நடத்திய பின்னர்- சடலங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி, உறவினர்களிடம் கையளிக்குமாறு வைத்தியர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.
இந்த பணிப்புரைக்கு அமைய, பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய சடலங்களை உறவினர்களிடம் கையளித்ததாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் முருகானந்தம் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
44 minute ago
07 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
07 Nov 2025