Freelancer / 2026 பெப்ரவரி 06 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன இராசமாணிக்கத்தால் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணையை பாராளுமன்ற பொது செயலாளர் நாயகம் குழுவிடம் வியாழக்கிழமை (05) அன்று கையளித்துள்ளதாக சாணக்கியன இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்காக தனிநபர் பிரேரணையொன்று பயங்கரவாத தடை தற்காலிக ஏற்பாடுகளை இரத்தச் செய்தல் சட்டமூலம் என்று குறிப்பிடப்படும் பிரேரணை பாராளுமன்ற பொது செயலாளர் நாயகம் குழுவில் கையளிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த பிரேரணை தொடர்பான நடவடிக்கைகளை பாராளுமன்றத்தில் தாமதிக்காமல் எடுக்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.
மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் இந்த பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்படும் என்று வாக்குறுதியளிக்கப்பட் பட்டிருந்தது. ஆனால் அந்த நம்பிக்கை தற்போது வீழ்ச்சியடைந்துள்ன என்று அவர் கூறினார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago