2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

காயப்பட்டவர்கள் தேறிவருகிறார்கள்: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர்

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 18 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கரடியனாறு வெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் தற்சமயம் தேறி வருவதாகவும் ஓரிரு தினங்களில் சிலரை வீட்டுக்கு அனுப்ப முடியுமெனவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் முருகானந்தம், தமிழ்மிரருக்கு சற்று முன்னர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் படுகாயமடைந்த நிலையில் 44பேர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள். இவர்களில் 19 காவற்றுறையினரும் அடங்குவர். மிகவும் ஆபத்தான நிலையிலிருந்த 4பேர் உடனடியாக கொழுப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏனையவர்களில் ஒரு பொலிஸார் மரணமாகிவிட்டார் எனவும் டொக்டர் முருகானந்தம் தொடர்ந்து எமக்கு கருத்து தெரிவித்தார்.

கட்டட துகள்கள் உடம்பில் பாய்ந்ததாலேயே பெரும்பாலானவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். சிலர் பாரிய எரிகாயங்களுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். இன்று சனிக்கிழமை அதிகாலையிலும் அடையாளம் காணப்படமுடியாமல் சிதைவடைந்த நிலையில் ஒரு சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .