2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

கரடியனாறு வெடிவிபத்து : அலட்சியங்கள் குறித்து விசாரணை

Super User   / 2010 செப்டெம்பர் 18 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு கரடியனாற்றில் நேற்று இடம்பெற்ற வெடிவிபத்துச் சம்பவத்திற்கு அலட்சியங்கள் காரணமா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் வெடிமருந்துகளையும் டெட்டோனேட்டர்களையும் அருகருகே வைத்திருந்ததன் மூலம் பாரிய தவறு இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட தடயவியல் சோதனைகள் உணர்த்துவதாக பொலிஸ் உயர் அதிகாரியொருவர் ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

"டைனமைற்றும் ஜெலட்டினும் ஒன்றாக களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டதாக தெரியவருகிறது. இது ஒருபோதும் நடந்திருக்கக்கூடாது" என  அந்த அதிகாரி கூறியுள்ளார்.

மேற்படி வெடிவிபத்தினால் 25 பேர் பலியானதுடன் 54 பேர் காயமடைந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மேலும் சடலங்கள் இடிபாடுகளுக்கிடையில் சிக்கியுள்ளனவா என்பதை கண்டறிவதற்கான தேடுதல்கள் நடைபெறுகின்றன.

பாரிய அகழ்வு இயந்திரங்கள் கரடியனாறு கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 

"முற்றாக சிதைவடைந்த கட்டிடங்கள் மற்றும் வாகனங்களுக்கிடையில் சடலங்கள் சிக்கியுள்ளனவா என்பதை அறிவதற்காக அப்பகுதியை சுத்தப்படுத்தவுள்ளோம் " என உள்ளூர் மீட்புப் பணியாளர் ஒருவர் ஏ.எவ்.பியிடம் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--