2025 ஜூலை 12, சனிக்கிழமை

ஐ.நா. பொதுக்கூட்டம்; ஜனாதிபதி மஹிந்தவின் உரைக்கு முதலிடம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 19 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் 65ஆவது பொதுக்கூட்டத்தின் அரச தலைவர்களின் உரைகள் பட்டியலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரை முதலாவதாக இடம்பெறவுள்ளதென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. பொதுக் கூட்டத்தில் கலந்துகொல்வதர்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 23ஆம் திகதி வியாழக்கிழமை இலங்கை நேரப்படி காலை 11 மணிக்கு உரையாற்றுவார்.

குறித்த பொதுக் கூட்டத்தில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளின் தலைவர்கள் மற்றும் விசேட பிரதிநிதிகள் பங்குபற்றும் இந்த மாநாட்டு நிகழ்ச்சி நிரலின்படி, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே முதல் உரையை நிகழ்த்த பணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாநாடு இடம்பெறுவதற்கு முதல் நாளான 22 ஆம் திகதி இடம்பெறும் புத்தாக்க அபிவிருத்தி இலக்கை நிறைவேற்றுவது தொடர்பான உயர் மட்ட பிரதிநிதிகளின் உச்சி மாநாட்டிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றவுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா வழங்கும் அரச தலைவர்களுக்கான விருந்து, முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் நிதியத்தின் விசேட கலந்துரையாடல், அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம் நியூயோர்க்கில் ஏற்பாடு செய்யும் வர்த்தக பிரமுகர்களுக்கான கலந்துரையாடல், நியூயோர்க் பெளத்த விஹாரையின் வைபவ நிகழ்வு ஆகியவற்றிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .