2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

'லக்ஷர் ஈ தொய்பாவுக்கான பயிற்சியில் புலிகளுக்கு தொடர்பில்லை'

Super User   / 2010 செப்டெம்பர் 19 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் புனே நகரிலுள்ள பேக்கரியொன்றில் அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பிருப்பதாக வெளியான செய்திகளை மஹாராஸ்டிரா மாநில பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர் நிராகரித்துள்ளதாக இந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள ஹிமாயட் பெய்க் எனும் மேற்படி நபர் லக்ஷர் ஈ தொய்பா எனும் தீவிரவாத இயக்கம் இலங்கையில் பயிற்சி பெற்றதாக தெரிவித்திருந்தார்.

அப்பயிற்சி வழங்கலில் தமிழீழ விடுதலைப் புலிகளும் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனவும் சில ஊடகங்கள் ஊகம் தெரிவித்திருந்தன.

ஆனால், "ஹிமாயத் பெய்க்கிற்கு பயிற்சியளிக்கப்பட்டதில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எவ்வித தொடர்பும் இல்லை" என மஹராஸ்டிரா மாநில பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் தலைவர் ராகேஸ்மரியா இந்து பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.

பெய்க் கொழும்பில் பயிற்சி பெற்றதாக கூறியுள்ளபோதிலும் இலங்கையின் உள்ளுர் அமைப்புகள் எதற்கும் இப்பயிற்சியில் தொடர்பில்லை என மஹராஸ்டிரா மாநில பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு கூறி வருகிறது.

'இதற்காக கொழும்பை தெரிவு செய்ததில் இரு காரணங்களே உள்ளன. வந்திறங்கியபின் விசா பெற முடியுமென்பதால் அந்நாட்டிற்குச் செல்வது இலகுவானது. மற்ற காரணம் சந்தேகிக்கப்படுவது குறைவு' என பெய்க் கைது செய்யப்பட்டவுடன் மரியா தெரிவித்திருந்தார்.

2008 மார்ச்சில் இலங்கைக்கு வந்த பெய்க்கிற்கு குண்டு தயாரித்தல் முதலானவற்றில் 15 நாள் பயற்சி வழங்கப்பட்டாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்தியாவுக்குள் நுழைவதற்காக லக்ஷர் ஈ தொய்பாவின் 200 அங்கத்தவர்கள் காத்திருப்பதாக இந்திய புலனாய்வுத் துறைக்கு அமெரிக்கா தகவல் வழங்கியிருந்ததாக எம்.எஸ்.என். இந்தியா எனும் ஊடகம் தெரிவித்திருந்தது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--