2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தனியார் பஸ் சங்கம் தீர்மானம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 20 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பஸ் கட்டணத்தை அதிகரிக்காமையால் போக்குவரத்து அமைச்சிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தனியார் பஸ் இயக்குநர்கள் சங்கம் இன்று திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பஸ் கட்டணத்தை இரண்டு சதவீதத்தால் அதிகரிக்குமாறு போக்குவரத்து அமைச்சிடம், தனியார் பஸ் இயக்குநர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

பஸ் வழித்தடங்களுக்கான முறையான நேரசூசி அட்டவனையை போக்குவரத்து அமைச்சு வழங்காததால் பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு தாம் கோரியிருந்ததாக   தனியார் பஸ் சங்க உரிமையாளர் கெமுனு விஜயரட்ன தெரிவித்தார்.

வீதிகளில் வாகன நெரிசல் காணப்படுவதுடன், எரிபொருள் பாவனையும் அதிகரித்துள்ளது.   இதன் காரணமாகவே பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறினார்.

எந்த நிபந்தனைகளின் அடிப்படையிலும் பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு அண்மையில் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (DM)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--