Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 21 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லா)
மன்னாரிலிருந்து, சிலாபம் ஊடாக கொழும்பை நோக்கி பிரயாணம் செய்த சொகுசு பஸ் ஒன்று இன்றுக் காலை முதலங்குளியில் வைத்து விபத்துக்குள்ளாகியதில் நால்வர் உயிரிழந்ததுடன் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த பஸ் வண்டியில் 25 பேர் பயணித்துள்ளதுடன் இவர்களில் காயமடைந்த அறுவரும் ஆணமடுவ வைத்தியாசலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இம்மூவரில் சாரதியும் உள்ளடங்குகின்றார். இறந்த நான்குப் பேரில் இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
குறித்த பஸ் கட்டுப்பாட்டினை இழந்து அப்பகுதியிலுள்ள வேப்பமரம் மற்றும் மின்சார கம்பத்தில் மோதியதை அடுத்தே இந்த மேற்படி விபத்து சம்பவித்துள்ளது. இது குறித்த விசாரணைகளை ஆணமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago