Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 21 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று வெளியான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளில் பன்னிபிட்டிய தர்மபால வித்தியாலயத்தைச் சேர்ந்த சனூஜ கல்ஹான் எதிரிசிங்க 196 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
மினுவாங்கொடை ஹொரகஹாமுல்ல ஆரம்பப் பாடசாலை மாணவன் நவின் யசன்க பிரேமரட்ண, களுத்துறை பிரதமிகா வித்தியாலத்தைச் சேர்ந்த ஜி.கே.கலானி பபசரா, காலி மஹிந்த வித்தியாலயத்தைச் சேர்ந்த ரட்ணாயக்க லியனகே லகித் நவகொட ஆகிய மூன்று மாணவர்களும் தலா 194 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
தமிழ் மொழி மூலத்தில் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவி மாலவன் சுபதா 193 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற சனூஜவை பாடசாலை ஆசிரியை பாராட்டுவதை அம்மாணவனின் தாய் அவதானிப்பதையும் அம்மாணவன் கிரிக்கெட் விளையாடுவதையும் படங்களில் காணலாம். (படப்பிடிப்பு: கித்சிறி டி மெல்)
3 hours ago
6 hours ago
7 hours ago
safeekAkkaraippattu Thursday, 23 September 2010 05:15 PM
எனது வாழ்துகள்
Reply : 0 0
xlntgson Sunday, 26 September 2010 09:45 PM
இவரை மட்டும் அல்ல தெரிய எல்லாரையும் நான் வாழ்த்துகின்றேன். அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியாமல் போய் விட்டதே என்று வருத்தப்பட்டுக்கொண்டு இருக்காமல் இனிவரும் கபொத பெறுபேறுகளில் கவனம் செலுத்துங்கள். கபொதவில் முதன்மை பெற்றவர்கள் ஐந்தாம் ஆண்டில் முதன்மை பெற்றவர்களாக இருந்ததில்லை. இன்னும் ஐந்தாண்டுகளில் நீங்கள் மேலும் வளர்வீர்கள் 'ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அது தானப்பா வளர்ச்சி!'
Reply : 0 0
xlntgson Monday, 27 September 2010 09:07 PM
இவரை மட்டும் அல்ல தெரிவடைந்த அனைவரையும் வாழ்த்துகின்றேன்! சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டு ஐந்தாம் ஆண்டு புலைமை பரிசில்திட்டம் ஒழிக்கப்படுமானால், (அவ்வாறான ஒரு திட்டம் பரிசீலனையில் இருக்கிறது என்று தெரிய வருகிறது, இளம் மனங்களை அழுத்தத்துக்குள்ளாக்குகிறது என்று) இவர்கள் தாம் கடைசி புலைமைபரிசில் பெற்ற குழு என்ற பெருமையை உடையவர்கள் ஆவர்! என்றாலும் பிரபலபாடசாலை மோகம் இருக்கின்றவரை ஆசிரியர்களது ஒத்துழைப்பு அதற்கு இன்றியமையாததாகும். அநேகமான பாடசாலைகள் ஆறாம் வகுப்பிலிருந்து படிக்க வசதியானவை! தரம்-1 தேவையா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago