2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

பரசிற்றமோல் பாவித்த சிறுமி மரணம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 23 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(காஞ்சன குமார ஆரியதாச,புஷ்பகுமார ஜயரட்ன)

தம்புல்லைப் பகுதியில் பரசிற்றமோல் மாத்திரையை அதிகளவில் பாவித்த 8 வயதுச் சிறுமி ஈரல் செயலிழந்தமையால் உயிரிழந்துள்ளார்.

8 வயதான ஹர்ஷிகா செவ்வந்தி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

தம்புல்லையிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெறச் சென்ற சிறுமியிடம்  பரசிற்றமோல் மாத்திரையை பாவிக்குமாறு மருந்துச் சிட்டை வழங்கப்பட்டது.

பின்னர் குறித்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், காய்ச்சல் குறைவடையவில்லை. இந்நிலையில், குறித்த சிறுமியை குருநாகலை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது அவர் இடைவழியில் உயிரிழந்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--