2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

சப்ரகமுவ மாகாணத்தில் தனியார் பல்கலை நிறுவுவதற்கு அரசு அனுமதி

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 24 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சப்ரகமுவ மாகாணத்தில் தனியார் பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக அந்த மாகாணத்தின் முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவித்துள்ளார்.

சர்வோதய சங்கச் செயலாளர் வைத்தியர் விநயா ஆரியரட்ன மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்ட மாநாட்டில் உரையாற்றுகையிலேயே, அவர் இதனைக் கூறினார்.  

அமெரிக்கா, இந்தியா, பெலறஸ் ஆகிய நாடுகளிலுள்ள தனியார் பல்கலைக்கழகங்களுடன்  இது தொடர்பில் பல சுற்றுக் கலந்துரையாடல்கள் நடைபெற்றதாகவும் சப்ரகமுவ மாகாணத்தில் சமூக, பொருளாதார, மற்றும் கலாசார பின்னணிகளைக் கொண்டதாக தனியார் பல்கலைக்கழகம் கூடிய விரைவில் நிறுவப்படும் எனவும் அவர் கூறினார்.

மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் இந்த தனியார் பல்கலைக்கழகத்தில் காணப்படும் எனவும் மஹிபால ஹேரத் தெரிவித்தார்.

சப்ரகமுவ மாணவர்கள் உயர் கல்வி கற்பதற்கான தேவை இருப்பதாகக் கூறிய சப்ரகமுவ மாகாண முதலமைச்சர், பொருளாதாரப் பிரச்சினை காரணமாகவும் போட்டியடிப்படையிலும் தேசிய மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் இவர்களுக்கான அனுமதி மறுக்கப்படுவதாகவும் இதனை முன்னிட்டே தனியார் பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதாகவும் கூறினார்.

இந்த மாநாட்டில் மாகாண முதலமைச்சரின் செயலாளர் பி.கொடித்துவக்கு, மாகாணசபையின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். (DM)
 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .