Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 24 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சந்துன் ஏ ஜயசேகர)
எதிர்க்கட்சி தலைவரினது பிரதிநிதி தொடர்பிலான பிரச்சினையை தீர்த்த பின், சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதம மந்திரியினதும், எதிர்க்கட்சித் தலைவரினதும் நாடாளுமன்ற சபைக்கான பிரதிநிதிகள் இருவரின் பெயரை அடுத்த வாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைப்பார்.
சபாநாயகர் சமல் ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவரும் பிரதம மந்திரியும் தத்தம் வேட்பாளர்களை தனக்கு தெரிவித்துள்ளதாக கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பெயரை சபாநாயகருக்கு வழங்கியுள்ளார்.
ஆனால், எம்.ஏ.சுமந்திரன் தான் இந்த நியமனத்தை ஏற்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
18ஆம் திருத்தத்தின்படி சபாநாயகர், பிரதம மந்திரி, எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் நாடாளுமன்ற சபையில் உத்தியோகப் பற்றற்ற உறுப்பினர்களாக இருப்பர்.
"சுமந்திரனுக்கு பதிலாக இன்னொருவரை நியமிக்கும்படி நான் விக்கிரமசிங்கவுக்கு எழுதவுள்ளேன். எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதி பற்றிய பிரச்சினையை பேசித் தீர்த்தபின், இருவரின் பெயர்களை ஜனாதிபதி அனுப்பிவைப்பேன்" என சபாநாயகர் கூறினார்.
பிரதம அமைச்சர் ஜயரட்ன நியமித்த முஸ்லிம் பிரதிநிதியின் பெயரை வெளியிட சமல் ராஜபக்ஷ மறுத்து விட்டார். இது ரவூப் ஹக்கீமா என்று கேட்கப்பட்டபோது இரு பிரதிநிதிகளின் பெயர்களையும் தான் நாடாளுமன்றத்தில் வெளியிடவுள்ளதாக அவர் கூறினார்.
சபாநாயகர் ராஜபக்ஷ, பிரதம மந்திரிக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் தத்தம் அபேட்சகர்களை 18ஆம் திருத்தம் அமுலுக்கு வந்த 7 நாட்களுக்குள் நியமிக்கும்படி கேட்டிருந்தும் கடைசி நேரம் வரை இருவரும் காத்திருந்தனர்.
3 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago